Skip to main content

3. குருமணிதன் நீளும்

சந்தம்

தனதனன தான தனதனன தான
    தனதனன தானத் ...... தனதான

பாடல்

குருமணித ன்நீளு நெடுமுயரை காணு
மிருவிழியு மெங்கும் ...... உண்டாகேள்

அழகுமலை யினேறு திருமுருக வேலு
மெறிபடூஉ தூரம் ...... எங்கோகாண்

கருத்தினிரு ந்தாட குறமகளு மாட
சேவகொடி யாட்டுங் ...... காற்றுஞ்சால்

பிறப்புமுறு வாது இறப்புமறி யாது
மயிலொடூஉ ஆடக் ...... காணுங்கால்

தடடடட தாட தடடடட தாட
தடுடுடுவென ஆடித் ...... தடுத்தாள

கருவினில டர்ந்து கருகியும் விடாது
சரவணபவ ஓதும் ...... அடியேன்தான்

கருப்பொரு ளுமாகி தனிபெருஉரு வாகி
முழுமுதற் மாறன் ...... கந்தன்தான்

தமிழும்த ந்தாக நவிழுமிசை யாக
அடியனை ஆளும் ...... பெருமாளே

சொல் விளக்கம்

குருமணி தன் நீளும் நெடும்உயரை காணும் ...... சிவபதியின் நீண்ட உயரத்தை காணவல்ல

இருவிழியும் எங்கும் உண்டாகேள் ...... இருவிழிகள் பிரபஞ்சத்தில் உண்டா

அழகர் மலையின் ஏறு திருமுருகன் வேலும் ...... சோலைமலை ஏறி முருகன் வேலை

எறிபடும் தூரம் எங்கோகாண் ...... எறியும் தூரம் அளந்து காண முடியுமோ

கருத்தினில் இருந்தாட குறமகளும் ஆடசேவகொடி ஆட்டும் காற்றும்சால் ...... கருத்தினில் முருகனாட அவனோடு வள்ளியுமாட சேவர்கொடியை ஆட்டும் நிறைந்த காற்றும் வீச

பிறப்பும் உறுவாது இறப்பும் அறியாது ...... பிறப்பு உறுவாது இறப்பும் அறியாது

மயிலொடு ஆடக் காணுங்கால் ...... மயிலொடு முருகன் ஆடுவதை காணும் கணம்

தடடடட தாட தடடடட தாடதடுடுடுவென ஆடித் தடுத்தாள ...... தடடடட தாட தடடடட தாட தடுடுடு என ஆடி என்னை ஆட்கொள்ள

கருவினில் அடர்ந்து கருகியும் விடாது ...... கருவில் ஏறிய முருக பாசம் உடல் கருகியும் விடாமல்

சரவணபவ ஓதும் அடியேன்தான் ...... ஓம் சரவணபவ என ஓதும் அடியேன் நான்தான்

கருப்பொருளும் ஆகி தனிபெரு உருவாகி ...... தொல்காப்பியம் கூறும் கருப்பொருளாகி தனிப்பெரும் கடவுளுமாகி

முழுமுதல் மாறன் கந்தன்தான் ...... கௌமாரம் கூறும் முழுமுதல் கடவுள் எங்கள் கந்தன் தான்

தமிழும் தந்தாக நவிழும் இசையாகஅடியனை ஆளும் பெருமாளே ...... தமிழும் தந்தருளி நவிழும் இசையும் ஆகிஅடியேனை தினமும் ஆளும் எங்கள் பெருமாளே